Monday, April 15, 2013

இலங்கைக்கு உதவியளிக்கையில் நிபந்தனைகள் விதிப்பதில்லை: இந்தியா

இந்தியா உதவிபெறும் நாடுகளின் இறைமைக்கு குந்தகம் விளைவிப்பதில்லை எனவும் தனது உதவிகளை கேட்கும் நாடுகளுக்கு வழங்குவதாகவும் கூறியுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கும் போது எவ்விதமான நிபந்தனைகளும் விதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.


'எமது ஒத்துழைப்பு உதவிக்கான கேள்வியின் அடிப்படையிலேயே அமையும். அது பங்காளி நாடுகளின் முன்னுரிமை விருப்புகளுக்கு ஏற்பவே இருக்கும். நாம் உதவிகளை நிபந்தனைகளோடு இணைப்பதில்லை. நாம் அவற்றுக்காக கொள்கைகளை வகுக்கப்பபோவதுமில்லை நாம் இந்த நாடுகளின் இறைமைக்கு சவாலாக இருப்பதுமில்லை. நாம் அபிவிருத்தி அனுபவங்கள், மூலவளங்களை பரிமாறிக்கொள்வதை ஊக்குவிக்கின்றோம்' என இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தென்-தெற்கு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு-தெற்கு ஒத்துழைப்புக்கு தென்-தெற்கு ஒத்துழைப்பு பிரதியீடாக இருக்கமுடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 10 வருடங்களில் சலுகை அடிப்படையில் இந்தியா 9.5 பில்லியன் அமெரிக்க டொலரை இந்திய பல்வேறு வகைப்பட்ட திட்டங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments: